கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின் மூன்றாம் நாள் : மீட்கப்பட்டுள்ள 19 எலும்புகூட்டு தொகுதிகள் (Photos)
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (22.11.2023) மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருவதுடன் இதுவரை 19 எலும்புகூட்டு தொகுதி மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் அகழ்வு பணி இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மீட்கப்பட்ட ஆதாரங்கள்
நேற்றையதினம் அகழ்வு பணிகள் நிறைவடையும் போது இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்ததுடன் நேற்றைய தினத்துடன் 19 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அந்த எலும்புக்கூடுகளில் இருந்து துப்பாக்கி சன்னங்கள், குண்டு சிதறல்கள் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பின் இலக்கத் தகடுகள் என்பன கண்டெடுக்கப்பட்டிருந்தன.
எதிர்வரும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை, விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் இந்த மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பது ஆராயப்படவுள்ளது.
மேலதிக அகழ்வுப் பணி
எத்தனை படைகளில் எலும்புக்கூடுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன எனும் தகவலை அறிவதற்காக களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரால் விஷேட ஸ்கேன் இயந்திரம் வழங்கப்படவுள்ளது.
இந்த இயந்திரத்தின் முலம் சோதனை நடைபெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்திருந்தார்.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள், கடந்த செப்டெம்பர் மாதம் 06ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 15ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது.
இந்த அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில், அதிலும் துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், குறித்த அகழ்வு பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
