சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த டேவிட் வோர்னர்
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் (David Warner) அறிவித்துள்ளார்.
ரி20 உலகக்கிண்ணத் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அரையிறுதி வாய்ப்பை அவுஸ்திரேலியா அணி தவறவிட்டது.
அரையிறுதி கனவு
சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணியிடம் மட்டும் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா, அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது.

இதனால் ஆப்கானிஸ்தான் - பங்களாதேஷ் மோதிய ஆட்டத்தின் முடிவில் அவுஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லுமா அல்லது வெளியேறுமா என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இதன் மூலம் அவுஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவு கலைந்த நிலையில் அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வோர்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவர் அவுஸ்திரேலியா அணிக்காக 18,995 ஓட்டங்களைப் எடுத்துள்ளார். இதில் 49 சதம் அடங்கும். அவுஸ்திரேலிய அணி 2 ஒருநாள் உலகக் கிண்ணங்கள் வென்ற அணியில் வோர்னர் இடம் பிடித்துள்ளார்.
மேலும் ஒரு ரி20 உலகக் கிண்ண அணியிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியிலும் வோர்னர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri