உயிரிழந்த தாயை முத்தமிட்ட மகளுக்கு கோவிட் தொற்று
திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சடலத்தை முத்தமிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் உயிரிழந்த பெண்ணின் மகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் விடயத்துக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்த பெண் திருகோணமலை - ரொட்டவெவ-மிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 50 வயது உடையவர் எனவும் தெரியவருகின்றது.
அத்துடன் உயிரிழந்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த 19 பேருக்கு இன்று (07) மாலை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோமரங்கடவல பிரதேசத்துக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
தொற்றுக்குள்ளான மூவரில் ஒன்றரை வயது சிறுவனொருவரும் அடங்குவதாகவும், பொதுச்சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டார்.
அத்துடன் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணி வந்தவர்களை தனிமைப்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் கூறினார்.
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan