தாயை மர கட்டையால் அடித்து கொலை செய்த மகள்
பெண்ணொருவர் தனது தாயை தலையில் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
38 வயதுடைய பெண்ணொருவர் 65 வயதுடைய தனது தாயாரை மர கட்டையினால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை சம்பவம்
பொரளை, பேஸ்லைன் மாவத்தை, சிங்கபுர அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மொஹமட் ஜஸ்மின் என்ற வயோதிப தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், கொலை செய்ய பயன்படுத்திய மூன்றடி உயரமுள்ள மர கட்டையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளில் தெரியவருபவை
சந்தேகநபரும் கொலை செய்யப்பட்ட தாயும் ஒரே வீட்டில் வசித்து வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் ஆறு வயது மகளை தாய் தாக்கியதாலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த மூதாட்டி வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியவர் என விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



