தாயை உலக்கையால் தாக்கி கொலை செய்த மகள்
கொழும்பு - பொரளை சிங்கபுர தொடர்மாடி வீடமைப்புத் தொகுதியில் நேற்று காலை பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே தொடர்மாடி வீடமைப்புத் தொகுதியில் வசித்து வந்த 65 வயதான பெண்மணியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக பெண்ணின் மகள், பெண்ணை சிறிய உலக்கையால் தலையில் தாக்கியதால், மரணம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட பெண்ணின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நேற்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொரளை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.