தென்னிலங்கை கடற்பரப்பில் மோசமான செயல் - ஆடைகளை களைந்து நடந்த மோசடி
பாணந்துறையில் ஓரினபால் சேர்க்கையாளருக்கான டேட்டிங் செயலி மூலம் ஒருவரை ஏமாற்றி கொள்ளையடித்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாணந்துறை கடற்கரையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், மடிக்கணினி மற்றும் கைடயக்க தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையடித்த குழுவினரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 17, 18 மற்றும் 19 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் பாணந்துறை, பெல்லன்வில, ஹிரான, மொரோந்துடுவ மற்றும் வாலனை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள்
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, சந்தேக நபர்கள் அந்த நபரை டேட்டிங் செயலி மூலம் தொடர்புக் கொண்டுள்ளனர்.
பின்னர் பாணந்துறை கடற்கரைக்கு அழைத்துச் சென்று, அவரது ஆடைகளைக் களைந்து வீடியோவை பதிவு செய்து, பின்னர் வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர்.
பணம் கொள்ளை
இதைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் அந்த நபரின் மடிக்கணினி, கைடயக்க தொலைபேசி மற்றும் 9,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.