யாழ் - அராலி பகுதியில் ஆபத்தான முறையில் பனைமரம் - உயிர் அச்சத்தில் பயணிகள்!
யாழ்ப்பாணம் - அராலி பாலத்தடியில் இருந்து அராலி அம்மன் கோவிலுக்கு செல்லும் 789 பேருந்து வழித்தட வீதியில் பனைமரம் ஒன்று ஆபத்தான முறையில் காணப்படுவதால் மக்கள் உயிர் அச்சத்தின் மத்திய போக்குவரத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், வீதியோரத்தில் நிற்கும் குறித்த பனைமரத்தை இனந்தெரியாதவர்கள் அரைகுறையாக வெட்டிய நிலையில் அந்த பனைமரம் முறிந்துவிழும் அபாயத்தில் காணப்படுகின்றது.
மக்கள் கோரிக்கை
குறித்த வீதியால் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் ஆபத்தான நிலை அங்கு காணப்படுகின்றது.

எனவே உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஆபத்துகளை தடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 



                                            
                                                                                                                                    
    
    
    
    
    
    
    
    
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri