வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள அபாய நிலை! கவலை வெளியிட்டுள்ள அதிகாரிகள்
தற்போது வட மாகாணத்தில் மலேரியா நோய் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் மலேரியா எதிர்ப்பு பிரச்சாரத்தின் பணிப்பாளர், ஆலோசகர் சமூக வைத்தியர் பிரசாத் ரணவீர இதனை தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நான்கு வாரங்களுக்குள் நாட்டில் நான்கு மலேரியா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவற்றுள் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த வருடத்திற்குள் மொத்தம் ஆறு மலேரியா நோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
அவர்களில் நான்கு நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.