எதிர்வரும் நாட்களில் அரச வைத்தியசாலைகளில் ஏற்படவுள்ள ஆபத்து! வெளியான எச்சரிக்கை தகவல்
டொலர் தட்டுப்பாடு காரணமாக அரச வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அரச மருந்து கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக பல அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் 3 அல்லது 4 மாதங்களில் அரச வைத்தியசாலைகளில் உள்ள மருந்தகங்கள் மற்றும் சத்திரசிகிச்சை அரங்குகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், அரச மருந்து விநியோகம் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் 72 கடன் கடிதங்கள் மீளச் செலுத்தப்படவில்லை எனவும்,சில கடன் கடிதங்கள் காலாவதியாகியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அடுத்த சில மாதங்களில் கையிருப்பு தீர்ந்து போகும் அபாயத்தை தவிர்க்க முடியாது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
