பிரபல நடிகைக்கு முன்பிணை வழங்குவதனை எதிர்க்கும் பொலிஸார்
இலங்கையின் முன்னணி நடிகை தமீதா அபேரட்ன மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு முன்பிணை வழங்குவதனை பொலிஸார் எதிர்த்துள்ளனர்.
தமீதா மற்றும் அவரது கணவர் ஆகியோர் முன்பிணை கோரி நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மீதான விசாரணைகளின் போது பொலிஸார், முன்பிணை வழங்குவதற்கு தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மோசடி
நபர் ஒருவரை வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி 35 லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தி தமீதா மற்றும் கணவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணைகளின் அடிப்படையில் பிணை வழங்குவதனை எதிர்ப்பதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இந்த முன்பிணை மனு தொடர்பில் எதிர்வரும் 27ம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
