புனரமைக்கப்பட்ட தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் திறந்து வைப்பு
புனரமைக்கப்பட்ட தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கிரிக்கெட் மைதானம் இயல்பான திறமைகளைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சம வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் "தேசிய கிரிக்கெட் அபிவிருத்திப் பாதை " எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நேற்று (05.02.2023) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தரம்
மேலும், இங்கு நீர் சிகிச்சைப் பிரிவு, புதிய மருத்துவ பிரிவு, சர்வதேச தரத்திலான நீச்சல் தடாகம் ஆகியவற்றின் செயற்பாடுகளை ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.

இந்த பிரிவுகளுக்கு மேலதிகமாக, விளையாட்டு வீரர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடிய உள்ளக கிரிக்கெட் மைதானம், புதிய ஊடக மையம் மற்றும் பிரதான கேட்போர் கூடம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டி வைத்தார்.
இதேவேளை, சர்வதேச தரத்திற்கு ஏற்ப நவீனப்படுத்தப்பட்டுள்ள ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அதிநவீன LED ஒளி விளக்குக் கட்டமைப்பை ஜனாதிபதி திறந்து வைக்கப்பட்டது.
கலாசார நிகழ்வுகள்
குறித்த திறப்பு விழாவில் பல கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முன்னாள் விளையாட்டு அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கிரிக்கெட் நிறுவனத் தலைவர் சம்மி சில்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri