பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு: வாழ்வாதார பயிர்களும் அழிவு - விவசாயிகள் கவலை(Video)
முல்லைத்தீவு - வன்னி விளாங்குளம் மற்றும் அம்பாள் புரம் ஆகிய பகுதிகளில் அண்மைய நாட்களாகப் பெய்த தொடர் மழை காரணமாகப் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதுடன், தமது வாழ்வாதார பயிர்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முல்லைத்தீவு - வன்னிவிளாங்குளம் பிரதேசத்தில் மழை காரணமாக சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த பல்வேறு வகையான பயிர் செய்கைகள் யாவும் தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அதாவது குறித்த பகுதியில் வெள்ளத்தினால் சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகப் பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவித்துள்ளார்.
அறுவடைக்குத் தயாராக இருந்த பப்பாளி மற்றும் மிளகாய் செடி, கொடித்தோடை போன்ற பயிர்கள் முழுமையாக அழிவடைந்து காணப்படுகின்றன.
இவ்வாறு ஏற்படுகின்ற அழிவுகளுக்கு இதுவரை எந்தவிதமான நஷ்டங்களும் கடந்த
காலங்களில் சரி இதுவரை கிடைப்பதில்லை என்றும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள்
கவனம் எடுத்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்
என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
