மினி சூறாவளி காரணமாக 23 தொடர் மற்றும் தனி குடியிருப்புக்கள் சேதம்
நோர்வூட் பிரதேசசபைக்கு உட்பட்ட டிக்கோயா - பட்டல்கலை மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக அந்த தோட்டத்தில் உள்ள 23 தொடர் மற்றும் தனி குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.
கடும் காற்று காரணமாக இந்த தோட்டத்தில் உள்ள 15ஆம் இலக்க தொடர் குடியிருப்பின் கூரைகள் காற்றினால் அள்ளூண்டு சென்றுள்ளதால் 16 வீடுகளுக்கு மழையால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இதேநேரம் குறித்த பகுதியில் பாரிய கருப்பன் தைலம் மரம் ஒன்று முறிந்து வீடுகளின் மேல் விழுந்ததால் வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன், ஏனைய இரண்டு வீடுகளின் கூரைத்தகடுகள் சேதமடைந்துள்ளன.
இதேபகுதியில் அமைந்துள்ள மற்றுமொரு தொடர்மாடி குடியிருப்பில் ஒரு சிலவீடுகளின் கூரைகளும் சேதமடைந்துள்ளன.
குறித்த பகுதியில் சுமார் 50 இற்கு மேற்பட்ட மரங்கள் மினி சூறாவளி காரணமாக முறிந்து விழுந்துள்ளதுடன், அதில் சில மரங்கள் மின் கம்பிகள் மீது விழுந்ததில் மின் கம்பிகள் மற்றும் வயர்கள் சேதமடைந்ததால், மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் கே.கே.ரவி இன்று காலை விஜயம் செய்து பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட வீடுகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்து மனித வள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக அவற்றை புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri

பிடிப்பட்ட ரித்தீஷ்.. குத்தாட்டம் போட்ட செல்வி மகன்- காதல் தோல்விக்கு கம்பெனி கொடுத்த அம்மா Manithan
