தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதால் ஏற்படும் பாதிப்பு! உலக செய்திகள் (Video)
உலகம் முழுவதும் 30 கோடிக்கும் அதிகமானோரை கோவிட் வைரஸ் பாதித்துள்ளது. கோவிட்டின் உருமாறிய டெல்டா, ஒமைக்ரொன் போன்ற வைரஸ் திரிபுகள் மக்களிடையே கடுமையாக பரவி வருகின்றன.
கோவிட் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் 2 தடவை தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. உருமாறிய கோவிட்டினை கட்டுப்படுத்த பூஸ்டர் எனும் செயலூக்கி தடுப்பூசியையும் பல நாடுகள் அறிமுகம் செய்துள்ளன.
இந்நிலையில் தொடர்ந்து செயலூக்கி தடுப்பூசி செலுத்துவது மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கும் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது,
4 மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து செயலூக்கி தடுப்பூசி செலுத்துவது மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பலவீனப்படுத்துவதோடு, மக்களை சோர்வடைய செய்யும். இதனால் செயலூக்கி தடுப்பூசி செலுத்தும் நாடுகள் இடைவெளிவிட்டு தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam