469 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை.. நேபாளத்தில் திடீரென இடைநிறுத்தப்பட்ட மீட்பு பணிகள்
நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சீனா - நேபாள எல்லையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. 1,468 பேர் மாயமாகியுள்ளனர்.
உள்நாட்டு மக்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மாயமாகியுள்ள நிலையில், நேபாள மற்றும் பொலிஸார், இராணுவம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன.
தற்காலிக நிறுத்தம்
இதற்கிடையில், திபெத் பக்கத்தில் உள்ள கியிராங் எல்லைத் துறைமுகத்திற்கு மேலே உள்ள ஒரு நீர்த்தேக்க அணை ஒன்று உடைந்துள்ளதாக நேபாள பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மேலும், "மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்துப் பாதுகாப்புப் பணியாளர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே போல், சீனாவும் மீண்டும் பாரிய வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் மீட்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. வெள்ள அச்சம் காரணமாக உள்ளூர் மக்கள் மலை மீது விரைந்து ஏறி வருவதாக செ்யதிகள் வெளியாகியுள்ளன.