சம்பந்தனை சந்தித்த டலஸ் மற்றும் சஜித்! அந்நியன் அவதாரம் எடுக்கும் ரணில் - அரசியல் ஆய்வாளர் (VIDEO)
ஜனாதிபதி வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க வெற்றிப்பெற்று சத்தியப்பிரமாணம் செய்தால் பின்னர் அவர் அந்நியனாக அவதாரம் எடுக்க வாய்ப்புள்ளதாக இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
மேலும்,போராட்டங்கள் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் உள்ள நிலையில்,ரணில் பதவியேற்றால் போராட்டங்களை அந்நியனாக மாறி அடக்கிவிடுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இரும்பு கரங்களை கொண்டு போராட்டக்காரர்களை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் நசுக்கி அடக்கிவிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தெரிவில் கூட்டமைப்பின் முடிவு வெளியானது |
மேலும்,வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் அதிகளவிலான படைகளை சுமந்து வந்து இறக்கி போராட்டக்காரர்களை அடக்கும் நிலை ஏற்படுமெனவும் எதிர்வு கூறியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,