முக்கிய பிரபுக்கள் வரிசையில் புனித தந்த தாதுவை பார்வையிட்ட 56000 பேர்
கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற புனித தந்த தாது கண்காட்சியை முக்கிய பிரபுக்கள் வரிசையில் சுமார் 56000 பேர் பார்வையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
சாதாரண பொதுமக்களுக்கு இல்லாத எந்தவொரு வரப்பிரசாதமும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கக் கூடாது என அரசாங்கம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பும் தேவையில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்க உறுப்பினர்கள் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், பயணமொன்றின் போது ஆரம்பத்தில் கெப் வண்டியில் பயணிக்கும் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் சிறிது தூரத்தின் பின்னர் வீ8 போன்ற அதி சொகுசு வண்டியில் பயணிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆறு மாத காலத்தில் சில தலைமுறைகளுக்கு சேவையாற்றியதாக அரசாங்கம் கூறிய போதிலும்,மக்கள் மூன்று வேளையும் சாப்பிட முடியாதிருப்பதாக சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.