அரசாங்கம் பௌத்த மக்களை இழிவுபடுத்தியுள்ளது! சஜித் காட்டம்
அரசாங்கம் பௌத்த மக்களை இழிவுபடுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தலதா மாளிகையின் எசல பெரஹராவிற்கு மின்சாரக் கட்டணத்தை வெளியிட்டதன் மூலம் அரசாங்கம் பௌத்தர்களை இழிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இழிவான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது
பௌத்த மக்களின் புனித பூமியான தலதா மாளிகைக்கு மின்சாரக் கட்டண பட்டியலை வெளியிட்டு அரசாங்கம் இழிவான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த பௌத்த சமூகத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அரசாங்கம் நடந்து கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும் அரசாங்கத்தை கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விகாரைகள் மத வழிபாட்டுத் தளங்களுக்கு சலுகைக் கட்டண அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |