நாளைய தினமும் மின்வெட்டு! வெளியான அறிவிப்பு (PHOTOS)
கொழும்பு முன்னுரிமைப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நேற்று முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை தினமும் 6 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, நாளைய தினம் A,B,C,D,E,F ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் ஒரு மணி முதல் மாலை 5 மணிவரை 4 மணி நேரமும், மாலை 7.30 மணி முதல் இரவு 10 மணிவரை 2 மணிநேரமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
G,H,I,J,K,L வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை 4 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 வரை 2 மணிநேரமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
P,Q,R,S ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணிவரை 4 மணி நேரமும், இரவு 8.30 மணி முதல் இரவு 11 மணிவரை 2 மணிநேரமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை 4 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 வரை 2 மணிநேரமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
அத்துடன், கொழும்பு (CC1) முன்னுரிமைப் பகுதியில் நாளை (7) காலை 6 மணிமுதல் காலை 9.30 மணிவரை 3 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.






Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
