சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலின் தற்போதைய நிலவரம் - செய்திகளின் தொகுப்பு
சென்னையைப் புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் தீவிர புயலாக ஆந்திர மாநிலம் அருகே கரையைக் கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா - வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவிய மிக்ஜாம் புயல்' வடக்கு திசையில் நகர்ந்து இன்று (05-12-2023) காலை 08.30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் காவாலிக்கு (ஆந்திரா) வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
நேற்றைய தினம் தீவிர புயலாக வலுப்பெற்று சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து, முக்கிய சாலைகளிலும் நீர் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புயல் நள்ளிரவு சென்னையை விட்டு விலகிச்சென்ற நிலையில், புயல் இன்று கரையைக் கடந்துள்ளது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு...

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
