வவுனியாவில் சூறாவளி காற்று! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வவுனியாவில் இன்று (17) வீசிய சூறாவளிக்காற்றால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஏழு மணியளவில் கடும் சூறாவளிக்காற்று வீசியதுடன்,மழையும் பொழிந்தது.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், மின்தடையும் ஏற்பட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
குறிப்பாக வவுனியா நகரப்பகுதியில் இருந்த நடைபாதை விற்பனை நிலையங்கள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் நகரம் உட்பட பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது.
குறிப்பாக மின்வடங்களுக்கு மேல் மரங்கள் வீழ்ந்தமையால் சில பகுதிகளில் மின்சார தடங்கல் ஏற்ப்பட்டுள்ளது.
தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல லொறிகளே..! முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



