மன்னார் வளைகுடாவில் சூறைக்காற்று: கடற்றொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை (Video)
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருவதால் தெற்கு துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகு கடற்றொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியா- தமிழ் நாடு, இராமநாதபுரம் மாவட்ட தெற்கு கடல் பகுதியான பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட துறைமுக கடற்றொழிலாளர்களுக்கே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 600க்கும் மேற்பட்ட கடற்றொழில் விசைப் படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆய்வு மையத்தின் எச்சரிக்கை
மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழகம், இலங்கை கரையோரம் 45 முதல் 55 கி.மீ.வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தடையால் 600க்கும் அதிகமான விசைப் படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தடையால் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் நேரடியாகவும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டே தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
கடல் உள்வாங்கியுள்ளது.
கடல் பகுதியில் திடீரென சுமார் 200 மீட்டர் உள் வாங்கியுள்ளதால் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகள் தரை தட்டி சேதமடைந்துள்ளது.
இதனால் மீன் பிடிக்க செல்லும் நாட்டு படகு கடற்றொழிலாளர்கள் கடலில் நடந்து சென்று படகுகளை கடலுக்குள் இழுத்து சென்று பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினர்.
கடல் உள்வாங்கும் நேரங்களில் கடற்கரையில் தரைதட்டி நிற்கும் கடற்றொழில் படகுகளை கடல் நீர் பெருக்கெடுக்கும் வரை கடற்றொழிலாளர் காத்திருந்து படகுகளை மீட்டு வருகின்றனர்.
இதனால் மீனவர்கள் மீன் பிடி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
