'டித்வா' சூறாவளி வருவதாக அறிவித்த அதிகாரிக்கு அச்சுறுத்தல்! நாடாளுமன்றில் அம்பலம்
வளிமன்டலவியல் திணைக்களத்தின் அத்தியட்சகர் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு செயலாளரின் நடவடிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நேற்று (04.12.2025) வளிமன்டலவியல் திணைக்களத்தின் அத்தியட்சகர் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட்டு ஊடகங்களுக்கு செல்ல வேண்டாம். கருத்து கூற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இந்த தகவல் வெளிவந்த பின்னர் எங்கேயாவது இது தொடர்பில் கூட்டம் வைத்தீர்களா? அரசாங்கம் இதற்கு முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும்.
ஜனாதிபதி என்ன செய்து கொண்டிருந்தார்
ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சின் வேலை இது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாடாளுமன்றிக்கு வந்து சத்தம் போட்டு கத்தி பொய் கூறத்தான் ஜனாதிபதிக்கு தெரியும்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரச இயந்திரம் கடுமையாக செயற்பட வேண்டும். ஆனால் 28 ஆம் திகதி அரசாங்கம் விடுமுறையை அறிவிக்கிறது. யாரிடம் கேட்டு இவ்வாறு செயற்பட்டார்கள்.

அனர்த்தத்தின் பின்னரான நிலைமை
ஆனால் அனர்த்தத்தின் பின்னரான நிலைமையை அரசு எப்படி கையாண்டது. நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேசிய காப்புறுதி நிதியம் ஒன்றை ஆரம்பித்திருந்தோம்.
இயற்கை பேரிடரின் போது ஏற்படும் பாதிப்புகளுக்கு நட்டஈடு வழங்குவதற்காக. ஆனால் இந்த அரசாங்கம் அந்த நிதியதிற்கு வழங்கும் பணத்தை நிறுத்தியுள்ளது.
இது வரை 400 வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளது.30,000 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam