துவிசக்கர வண்டிகளுக்கும் கடன் வசதி
துவிசக்கர வண்டிகளுக்கு கடன் வழங்கும் நடவடிக்கைகளை லீசிங் நிறுவனங்கள் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. எரிபொருள் விலை அதிகரித்துள்ளதை அடுத்து எரிபொருளை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால், பலர் துவிசக்கர வண்டிகளை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனினும் துவிசக்கர வண்டிகளின் விலை எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதால், சில லீசிங் நிறுவனங்கள் ஏற்கனவே புத்தளம் மற்றும் ஆனமடுவை பிரதேசங்களில் துவிசக்கர வண்டிகளை கொள்வனவு செய்ய கடன் வழங்க ஆரம்பித்துள்ளன.
ஒரு துவிசக்கர வண்டியின் விலை 50 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் அதிகரித்துள்ளதால், அதனை கொள்வனவு செய்வதற்கான கடன்களை வழங்க ஆரம்பித்துள்ளதாக லீசிங் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri