இணைய பாதுகாப்பு திட்டம் விரைவில் செயற்படுத்தப்படும்: டிரான் உறுதி
மிகவும் விவாதிக்கப்பட்ட சட்டத்திருத்தமான இணையப் பாதுகாப்பு யோசனை ஜனவரி 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று(04.01.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எனினும் சட்டமூலத்தில் மேலும் முன்மொழிவுகள் மற்றும் திருத்தங்கள் சாத்தியம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளதுடன் இந்த திருத்தங்கள் ஜனவரி 8ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இணையப் பாதுகாப்பு சட்டத்திருத்தம்
எனினும் சட்டமூலத்தை முன்வைக்க வேண்டிய அவசரத்தை வலியுறுத்தியுள்ளார்.
இணைய அத்துமீறல்களின் பரவலை எடுத்துக்காட்டும் வகையில், 2023 ஆம் ஆண்டில், குழந்தைகள் பாதுகாப்பு விடயங்களில் பதிவுசெய்யப்பட்ட 8,000 முறைப்பாடுகளில் சுமார் 3,000 முறைப்பாடுகள், சமூக ஊடக தளங்களில் இருந்து வந்தவை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அமைப்புகளும், தூதரகங்களும் இதற்கு எதிராக தம்மிடம் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
அத்துடன் ஒரு வெளிநாட்டுத் தூதர் இதை நிறுத்தும்படி கூறினார். எனினும் இந்த சட்டமூலத்தின் அவசியத்தை தாம் அவருக்கு புரியவைத்ததாக டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |