போலி விளம்பரங்கள் ஊடாக மோசடிகள் - இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பண்டிகைக் காலங்களில் தொலைபேசிகள் ஊடாக முன்னெடுக்கப்படும் சைபர் (Cyber) மோசடிகள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசரப் பதிலளிப்பு நிலையம் (SLCERT)இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
பண்டிகை காலத்தை முன்னிட்டு தள்ளுபடிகள் (Discounts), பரிசுப் பணம் அல்லது விசேட சலுகைகளை வழங்குவதாகக் கூறி போலியான விளம்பரங்கள் மற்றும் இணைய இணைப்புகள் (Links) சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையம் ஊடாகப் பரப்பப்படும் அபாயம் காணப்படுவதாக நிலையத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

எனவே, சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அழுத்துவதையோ அல்லது உங்களது தனிப்பட்ட தகவல்களைப் பரிமாறிக்கொள்வதையோ தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்! விமானியை பிடித்தால் பரிசு - நேரடி மோதல் வெடிக்கும் அபாயம்
இஸ்ரேலில் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்! முக்கிய தொழிற்துறை வலயத்தில் பாரிய தீப்பரவல்: நச்சு வாயுக்கள் வெளியேறும் அபாயம்