ஊடகவியலாளரின் கேள்வியை மறுதலித்த பிரதியமைச்சர்!
கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்திவிடம் ஹெக்கர் அச்சுறுத்தல் தொடர்பில் தொடுத்த வினாவுக்கு யுத்தம் மற்றும் டித்வா சூறாவளியில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்த முறைமை தொடர்பில் நீண்ட கருத்து கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் அரசாங்கத்திற்கும் அரச இயந்திரத்திற்கும் ஹெக்கர் தாக்குதல் தொடர்பில் ஆபத்து இருப்பதாக சொல்லப்படுகிறதே நீங்கள் இது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?
கேள்வியை மறந்த பிரதியமைச்சர்
பதிலளித்த பிரதியமைச்சர் நாமல் கருணாரத்தன:உலகத்தில் யுத்தம் ஒன்று ஏற்பட்டுள்ளதால் அனைத்து நாடுகளும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளன.
அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நாடாக நாம் அதற்கு முகம் கொடுத்து பிரச்சினைகளை தீர்த்துள்ளோம்.தீர்த்து வருகிறோம்.
டித்வா சூறாவளியில் ஏற்பட்ட நெருக்கடிகை தீர்த்துள்ளோம்.எந்தவித சூறாவளி வந்தாலும் அதற்கு முகம் கொடுக்கும் சக்தி அரசாங்கத்திடம் உள்ளது.

நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அதை சமாளிக்கும் வகையில் மாவட்ட மட்டத்தில் எமது தொழிலாளர் தின கொண்டாடங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும் பசளைக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போதும் அந்த சிக்கலை நாம் தீர்த்துள்ளோம்.ஒரு பசளை மூடை 17500-18000 ரூபா வரை சென்றது.
அரசாங்கம் தலையிட்டு அதற்கான செலவை ஈடுசெய்து 9000-10000 ரூபா வரை விலையை குறைத்துள்ளது என கேட்ட கேள்வியை மறந்தோ அல்லது கருத்து கூற தெரியாத என்ற காரணத்தாலோ என்னவோ ஏதோ ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.