இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்
மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய விமானப்படை உதவிவரும் நிலையில் குறித்த தரப்பின் விமானங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் 29ஆம் திகதி சக்தி வாய்ந்த நில நடுக்கம் மியான்மரில் ஏற்பட்டது.
இதில் ஏராளமான கட்டிடங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் இடிந்து தரை மட்டமானது. தலைநகர் நய்பிடாஸ், மண்டாலே ஆகிய நகரங்கள் உருக்குலைந்து போனது.
3 ஆயிரம் பேர் பலி
இந்த நில நடுக்கத்தில் சிக்கி 3 ஆயிரம் பேருக்கு மேல் பலியானார்கள்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன.
ஆபரேஷன் பிரம்மா என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படையினர் மியான்மரில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சைபர் தாக்குதல்
இந்த சைபர் தாக்குதலால் நடுவானில் பறந்த விமானத்தின் விமானிகளுக்கு தவறான தகவல்கள் கிடைக்க தொடங்கியது.
இதனால் விமானிகள் குழப்பம் அடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட அவர்கள் அவசரகால சிக்னல்களை பயன்படுத்தி உண்மையான நிலவரங்களை கண்டறிந்தனர்.
இதையடுத்து இந்த சைபர் தாக்குதலை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக முறியடித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
