மற்றுமொரு அரச இணையத்தளம் மீதும் சைபர் தாக்குதல்
இலங்கை அச்சகத் திணைக்களத்தின் (Department of Government Printing) இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு (SLCERT) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வெளிதரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வருவது
அச்சகத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அனுமதியின்றி ஒருவர் பிரவேசித்துள்ளதாக அதன் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த இணையத்தளம் வேறு வெளிதரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வருவது அவதானிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழுவின் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை பொலிஸின் யூடியூப் சேனல் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |