இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது, இந்திய துணை ஜனாதிபதி C.P இராதாகிருஸ்ணன் இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் OCI விசாவை வழங்குங்கவதற்கான நடைமுறை இலகுப்படுத்தப்பட்டுள்ளது.
அரசியல் நிலவரங்கள்
இருந்த போதிலும், OCI விசா பெறுவதற்கான கட்டணம் இலங்கை ரூபா மதிப்பில் 90 ஆயிரம் என்பதால், அதனை பெற்றுக் கொள்வதில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே OCI விசாவை பெறுவதற்கு விசேட சலுகை முறையில் குறைந்த கட்டணம் அறவிட வேண்டும் என செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
தெலுங்கானா முதலமைச்சரை சந்தித்தமை குறித்தும், அவருடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் குறித்தும் செந்தில் தொண்டமான் சந்தோஷ் ஜாவிடம் தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும், இச்சந்திப்பின் போது சமகால அரசியல் நிலவரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri