இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lankan Peoples Money
By Vethu Jul 14, 2026 03:06 PM GMT
Report

இலங்கையில் GovPay போன்ற அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பணப்பரிமாற்றத் தளங்களைப் போன்று போலியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

இவ்வாறான போலியான தளங்கள் மற்றும் செய்திகள் மூலம் பொதுமக்களின் பணம் மோசடி செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் GovPay தளத்தைப் போலவே போலியான இணையதளங்களை மோசடி கும்பல்கள் உருவாக்கியுள்ளன.

இவ்வாறான தளங்கள் மூலம் வாகனப் போக்குவரத்து அபராதங்களை செலுத்துமாறு மக்களை ஏமாற்றியுள்ளனர்.

போலி போக்குவரத்து அபராதங்கள்

மேலும், இலங்கை பொலிஸாரின் பெயரில் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி, வாகன உரிமையாளர்கள் ஏதோ ஒரு போக்குவரத்து குற்றத்தைச் செய்துள்ளனர்.

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை | Sri Lankan Police Warned People

அபராதத்தை உடனே செலுத்துமாறும் கூறி, போலியான இணைய இணைப்புகளை வழங்குகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து அபராதங்கள் பொதுவாக அந்த இடத்திலேயே வாகன ஓட்டுநர்களுக்கு தெரிவிக்கப்பட்டதன் பின்னரே வழங்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்காணிப்பு கமராக்கள் மூலம் குற்றங்கள் கண்டறியப்பட்டாலும், பொலிஸார் ஒருபோதும் குறுஞ்செய்தி மூலம் வங்கி கணக்கு விவரங்களை கேட்பதில்லை. அத்துடன் அதிகாரப்பூர்வமற்ற இணைய இணைப்புகள் மூலம் அபராதத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்துவதில் இல்லை எனவும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

எனவே, இது போன்ற சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்திகள் அல்லது இணையதளங்கள் தொடர்பில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வித பணப்பரிமாற்றத்தைச் செய்யும் முன்பும் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US