கொட்டகலை பிரதேச சபை இ.தொ.கா வசம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராஜமணி பிரசாந்த், திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜேசுதாசன் வியாகுலமேரி சபையின் உப தலைவராக ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கொட்டகலை பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது.
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ராஜமணி பிரசாத், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக லெட்சுமன் விஷ்வநாதன் ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.
வெளிநடப்பு
தலைவர் பதவிக்கு இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டதால், திறந்த வாக்கெடுப்பு அல்லது இரகசிய வாக்கெடுப்பு மூலம் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், உறுப்பினர்கள் தனக்கு முன் அழைக்கப்பட்டு, பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின் அடிப்படையில் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் கூறினார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த லெட்சுமன் விஷ்வநாதன் உட்பட நான்கு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
சபையில் 12 உறுப்பினர்களும், வலுவான கோரமும் இருந்ததால், பிரதேச சபைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு 10 உறுப்பினர்கள் திறந்த வாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டதையடுத்து, ஆணையாளர் வெளிப்படையாக வாக்கெடுப்பை நடத்தினார்.
திறந்த வாக்கெடுப்பில், தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ராஜாமணி பிரசாந்த், 10 வாக்குகளைப் பெற்று சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் இரண்டு சுயாதீன உறுப்பினர்கள் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டனர்.
மேலதிக தகவல் - சதீஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் நேரம் திடீர் மாற்றமா?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
