ஜனாதிபதி ரணிலுடன் நெருங்கிய உறவைப் பேணும் சி.வி.விக்னேஸ்வரன்
தமிழ் மக்கள் கூட்டணி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அண்மைக்காலமாக நெருங்கிய உறவை கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் (11.02.2023) யாழ்ப்பாணத்தில் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதியை சந்தித்த போதே இது தெளிவாகியுள்ளது.
காரைக்கால், தமிழ்நாடு மற்றும் காங்கேசன்துறை இடையேயான படகு சேவையை எளிதாக்க இலங்கை தயாராக உள்ளது, ஆனால் இந்திய நிறுவனங்கள் இன்னும் ஈடுபட முன்வரவில்லை என்று இதன்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.
பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கிறேன்
கடந்த புதன் கிழமை, ஜனாதிபதி தனது சிம்மாசன உரையை முடித்துக் கொண்டு நாடாளுமன்ற அறையிலிருந்து வெளியேறும் போது, விக்னேஸ்வரனுடன் சிறிது நேர உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் ஜனாதிபதி என்ன கூறினார் என்று சி.வி.விக்னேஸ்வரனிடன் செய்தியாளர்கள் வினவியபோது,
தாம் முன்னர் முன்வைத்த விடயங்களில் பாதியளவிலான விடயங்கள் தமது உரையில் ஜனாதிபதி தெரிவித்ததாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பிரச்சினைகள் மற்றும் எதிர்ப்புகள் குறித்து எப்போதும் புகார்
கூறுவதை விட, பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் கொண்டு சென்று தீர்க்க
முயற்சிக்கிறேன் என்று நேற்றைய யாழ்ப்பாண சந்திப்பின் பின்னர் விக்னேஸ்வரன்
தெரிவித்துள்ளார்.





அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
