வரலாறு காணாத சாதனை படைத்த இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம்!
இலங்கை சுங்கத் திணைக்களம் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஒரு டிரில்லியன் ரூபாய்க்கு (1,000 பில்லியன்) மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களம்
கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,"இலங்கை சுங்கத்தின் வருவாய் இன்று ஒரு டிரில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை ஆறு மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளன.
இலங்கை சுங்கத் திணைக்களத்தால் செயல்படுத்தப்பட்ட வருவாய் வசூல் முறையின் மறுசீரமைப்பு இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
வருவாய்
இதனடிப்படையில், இந்த ஆண்டுக்கான வருவாய் இலக்கை தாண்டுவதற்கான வாய்ப்பு உள்ளது.
அரசாங்கத்தால் எங்களுக்கு வழங்கப்பட்ட இந்த ஆண்டுக்கான வருவாய் இலக்கு 2,115 பில்லியன் ரூபாய் (2.115 டிரில்லியன்) ஆகும்.
தற்போது பெறப்பட்ட வருவாயின் அடிப்படையில், இந்த இலக்கை தாண்டுவதற்கான வாய்ப்பு சுங்கத் திணைக்களத்திற்கு உள்ளது.''என கூறியுள்ளார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
