வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை-செய்திகளின் தொகுப்பு
வடக்கு மாகாணத்தின் தற்போதைய வெப்பநிலை உயர்வின் அடிப்படையில், பல பகுதிகளின் கிணறுகளின் நீர்மட்டம் குறைவடைந்து மே மாதத்தின் நடுப்பகுதியில் மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படக்கூடும் என யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.
அடுத்த 15 நாட்களுக்கு வடக்கு மாகாணத்தின் வெப்பநிலை உயர்வாக காணப்படும். சூரியனுடைய நிலை 08 பாகை 37 கலை வடக்கு அகலாங்கிலும் 69 பாகை 14 கலை கிழக்கு நெட்டாங்கிலும் அமைவு பெற்றுள்ளது.
இதனால், எதிர்வரும் 30.04.2023 வரை வடக்கு மாகாணத்தின் ஆவியாக்கத்தின் அளவு கடந்த வாரத்தினை விடவும் 19 சதவீதத்தினால் அதிகரித்து காணப்படும்.
கடந்த மாரி கால பருவ மழை இயல்பை விட குறைவாக இருந்தமையால் மாகாணத்தின் தரைமேற்பரப்பு மற்றும் தரைக்கீழ் நீரின் அளவு ஏற்கனவே குறைவாக காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
