பிரித்தானியாவின் தற்போதைய கோவிட் தொற்று நிலவரம்!
பிரித்தானியாவில் கோவிட் வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 23,511 பேர் பாதிக்கப்பட்டதோடு 131 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 5,745,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 129,303 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 1,145,999பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 820 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 4,470,224 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் பிரித்தானியாவில் தொடர்ச்சியாக ஏழாவது நாளாக நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
எனினும், மார்ச் 17க்கு பின் நாளாந்த கோவிட் மரணங்களில் எண்ணிக்கை இன்று உயர்வாக பதிவாகியுள்ளது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 18 மணி நேரம் முன்
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri