காலநிலை குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!
நாட்டின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் (13.04.2023) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனக் கூறப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும். எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூரியன் உச்சம்
இதேவேளை, சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, கடந்த 5ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தன்படி, இன்றைய தினம் (13.04.2023) நண்பகல் 12.11 அளவில் மன்னார், பெரியமடு, புளியங்குளம் மற்றும் கொக்கிளாய் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாகச் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri