இலங்கையில் விற்கப்படும் பெருந்தொகை சொத்துக்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இலங்கை வாழ் மக்கள் தமது சொத்துக்களை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
குடும்பங்களின் உணவு பாதுகாப்பு நிலை குறித்து அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மக்களின் நிலை
இது தொடர்பில் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் மக்கள் தங்கள் சொத்துக்களை விற்கும் குறைவாக உணவுண்ணும் நிலை காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் வரலாற்றில் மிகமோசமான நாணய வீழ்ச்சி தற்போது ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையர்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தமது சொத்துக்களை விற்பதுடன் மிககுறைவாக உணவு உண்கின்றனர்.
உலக உணவு திட்டத்தின் அறிக்கை
பத்தில் மூன்று குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்டுள்ளன. பத்தில் ஏழு குடும்பங்கள் மிகவும் குறைவாக விரும்பப்படும் உணவை உண்கின்றனர்.
இதேவேளை பத்தில் எட்டு குடும்பங்கள் வாழ்வாதாரத்தை சமாளிப்பதற்காக பெறுமதியான சொத்துக்களை விற்கின்றனர்.
இவ்வாறு சொத்துக்களை விற்கும் நிலை ஜூன் மாதத்திற்கு பின்னர் அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் இந்த போக்கை அவதானிக்க முடிகின்றது என டிசம்பரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது.