நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்குச்சட்டம்

Srilanka Curfew Strictly Sri Lanka Economic Crisis
By Siva thileep Apr 03, 2022 03:48 PM GMT
Siva thileep

Siva thileep

in சமூகம்
Report

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

நாடளவிய ரீதியில் ஊரடங்குச் சட்டமானது நேற்று(03) மாலை 6 மணியிலிருந்து நாளை(05) காலை 6 மணிவரை அறிவிக்கபட்டுள்ளது.

மட்டகளப்பு,

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்கு சட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை முதல் அமுல்படுத்தப்பட்டுவருகின்றது.

நேற்று மாலை 06 மணி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்குச்சட்டம் | Curfew Strictly Enforced Parts Country

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்தினை நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. நேற்று மாலை மட்டக்களப்பு நகர் உட்பட பல்வேறு இடங்களில் ஊரடங்கு சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பணிகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்குச்சட்டம் | Curfew Strictly Enforced Parts Country

மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருகின்றனர். இதேநேரம் நேற்று மாலை ஊரடங்கு சட்டத்தினையும் மீறி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெருமளவான மக்கள் கூடியிருந்ததை  காணமுடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவத்துள்ளார்.

நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்குச்சட்டம் | Curfew Strictly Enforced Parts Country

இதனை தொடர்ந்து ஊரடங்கு சட்டத்தினையும் மீறி இன்று மாலை எரிபொருள் நிலையங்களில் மக்கள் கூட்டமாக நின்றனர்.

மட்டக்களப்பு நகரில் பார்வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இன்று மாலை நேரத்தில் பெருமளவானோர் நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பியதை காணமுடிந்தது.

நேற்று மாலை தொடக்கம் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றினை இறுக்கமான நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்குச்சட்டம் | Curfew Strictly Enforced Parts Country

எரிபொருள் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் மக்களை ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு – கல்முனை,

மட்டக்களப்பு – கல்முனை பகுதியிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மிகவும் கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

அந்த வகையில் மாவட்டதிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் காரியாலயங்கள், வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள், சுப்பர் மார்கட், தனியார் நிலையங்கள், அறநெறிப் பாடசாலைகள், உள்ளிட்ட அனைத்தும் இயங்காத நிலையில் முற்றாக மூடப்பட்டுள்ளன.

நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்குச்சட்டம் | Curfew Strictly Enforced Parts Country

வீதிகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி சந்தியில் பொலிஸாரால் புதிதாக வீதித்தடைகள் இடப்பட்டு, அவ்வப்போது வரும் வாகனங்களையும், மக்களையும் பரிசோதனைக்குட்படுத்தி வருவதுடன், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் செல்பவர்களை போக்குவரத்திற்கு விடுவதுடன்.

நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்குச்சட்டம் | Curfew Strictly Enforced Parts Country

ஏனையவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வரப்படுகின்றனர். மாவட்டத்தின் படுவாங்கரை மற்றும் ஏழுவாங்கரைப் பகுதிக்கு பரஸ்பர விஜயம் செய்பவர்கள் பட்டிருப்பு சந்தியிலிருந்து வைத்து பொலிஸார் வழிமறித்து வைத்தியசாலை, விவசாய நடவடிக்கை உள்ளிட்ட அத்தியவாசிய தேவைகளுக்கு மாத்திரம் செல்பவர்களை பயணத்திற்கு விடுவதையும், ஏனையவர்கள் பொலிஸாரின் கண்டிப்பான உத்தரவிற்கமைய திருப்பி அனுப்பப் படுவதையும் அவதானிக்க முடிகின்றது.

முல்லைத்தீவு,

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரம், புதுக்குடியிருப்பு நகரம், முள்ளியவளை நகரம், மாங்குளம், மல்லாவிநகரம், விசுவமடு போன்ற பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகள், விவசாய செய்கைகள், கடற்றொழில் நடவடிக்கைகள், கைத்தொழில் முயற்சிகள் , போக்குவரத்து செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்து மக்களின் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்குச்சட்டம் | Curfew Strictly Enforced Parts Country

வைத்திய சாலை செல்வோர் தவிர்த்து அனைவரும் இராணுவம் மற்றும் போலிஸ் காவலரண்களில் மறிக்கப்பட்டு எச்சரித்து திருப்பி அனுப்பப்படுவதுடன், வீதிகளின் இடைகளில் இராணுவம் மற்றும் போலிஸ் இணைந்த வீதி சோதனைகள் இடம்பெற்று வருகின்றது.

நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்குச்சட்டம் | Curfew Strictly Enforced Parts Country

மேலும் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் வெளியேறாது வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் வீதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து  சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கறுப்பு கொடி கட்டி  அரசிற்கு எதிரான கனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.

நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்குச்சட்டம் | Curfew Strictly Enforced Parts Country

நாட்டில் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள அவசரகாலச்சட்டத்தினை உடனடியாக நீக்க கோரியும் ஊரடங்கு சட்டத்தினை மீளப்பெறகோரியும் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி தொடர்ந்து போராடவேண்டும் எங்கள் இன்த்திற்காக மட்டுமல்ல இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் சார்ந்த போராட்டம் இலங்கை அரசிற்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் ஒவ்வொருவரும் உங்கள் வீடுகளில் கறுப்பு கொடி கட்டி தொடர்ந்து போராடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளர்.

கிளிநொச்சி, 

நாடாளவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தினால் முற்றாக முடங்கியது கிளிநொச்சி நகரம்.

நேற்றைய தினம் (02) மாலை 6.00மணியில் இருந்து திங்கள் காலை 6.00மணி வரை குறித்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து இன்றைய காலையில் இருந்து சமூக வலைத்தளங்களும் மாலை வரை முடக்கப்பட்டிருந்தது.

நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்குச்சட்டம் | Curfew Strictly Enforced Parts Country

தென் இலங்கையில் ஐனாதிபதிக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக இன்று (03)மக்கள் அனைவரும் வீதிக்கு இரங்கி தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு குறுஞ்செய்திகள் வெளியாகிய நிலையில் மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்கு முன் ஆயத்தங்கள் மேற்கொண்டனர்.

நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்குச்சட்டம் | Curfew Strictly Enforced Parts Country

இதனையடுத்து திடீரென நேற்றைய தினம் இலங்கை அரசு குறித்த ஊரடங்கை அமுல் படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.இதில் பளையிலும் ஊரடங்கு அமுலில் இருந்த காட்சிகள்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US