ஊரடங்கு சட்டம் தளர்வின் போது பேருந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் (Photos)

Sri Lanka Upcountry People Mannar Curfew Sri Lankan Peoples
By Kanamirtha May 12, 2022 09:22 AM GMT
Kanamirtha

Kanamirtha

in சமூகம்
Report

நாடளாவிய ரீதியில் இன்று காலை 7 மணியளவில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில், எரிபொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வேறு பகுதிகளுக்குச் செல்வதற்குப் பேருந்து நிலையங்களிலும் அதிகளவான மக்கள் ஒன்றுகூடிய நிலைமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

மன்னார்

மன்னாரிலும் மக்கள் எரிபொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வேறு பகுதிகளுக்குச் செல்வதற்குப் பேருந்து நிலையங்களிலும் அதிகளவாக ஒன்றுகூடியிருந்தனர்.

அரச திணைக்களங்கள் மற்றும் வங்கிகள் 12 மணி வரை இயங்கிய நிலையில் அதிகளவான மக்கள் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தனர்.

பொது இடங்களில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பிரசன்னம் குறைவாகவே காணப்பட்டது. மேலும் இன்று மதியம் 2 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், மக்கள் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்து சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தி - ஆசிக் 

ஊரடங்கு சட்டம் தளர்வின் போது பேருந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் (Photos) | Curfew Relaxation Crowds Bus Stops Gas Stations

மலையகம்

நாட்டில் நடைமுறையிலிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணிமுதல் தளர்த்தப்பட்டதை அடுத்து மலையகத்தில் நிலைமைகள் வழமைக்கு திரும்பியது.

சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், கடை தொகுதிகள் என்பன திறக்கப்பட்டு இருப்பதையும் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவில் மும்முறமாக ஈடுபடுவதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

சில இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

பாடசாலைகள் மூடப்பட்டு இருப்பதையும், அரச திணைக்களங்கள் திறந்திருந்துள்ளதுடன், மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் இடம்பெறுவதையும் அவதானிக்கமுடிந்தது.

மேலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு நகரங்களின் பிரதான சந்திகளில் வீதிமறியல் போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

செய்தி - திருமால்

ஊரடங்கு சட்டம் தளர்வின் போது பேருந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் (Photos) | Curfew Relaxation Crowds Bus Stops Gas Stations

ஊரடங்கு சட்டம் தளர்வின் போது பேருந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் (Photos) | Curfew Relaxation Crowds Bus Stops Gas Stations

ஊரடங்கு சட்டம் தளர்வின் போது பேருந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் (Photos) | Curfew Relaxation Crowds Bus Stops Gas Stations

யாழ்ப்பாணம்

யாழிலுள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் கூட்டம் கூடமாக வருகைதந்து செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.

ஊரடங்கு சட்டத்தினை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக நேற்றையதினம் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில், இவ்வாறு மக்கள் வந்து செல்வதை காணமுடிகிறது.

அந்தவகையில் சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுமார் 800ற்கும் அதிகமானோர் வாகனங்களுடன் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முண்டியடித்ததை அவதானிக்க முடிந்தது. இதனால் வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதன்போது குழப்பங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் வாகன நெரிசலை சீர் செய்யவும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சமன் குணதிலகவின் வழிகாட்டலின் கீழ் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

ஊரடங்கு சட்டம் தளர்வின் போது பேருந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் (Photos) | Curfew Relaxation Crowds Bus Stops Gas Stations

ஊரடங்கு சட்டம் தளர்வின் போது பேருந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் (Photos) | Curfew Relaxation Crowds Bus Stops Gas Stations

ஊரடங்கு சட்டம் தளர்வின் போது பேருந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் (Photos) | Curfew Relaxation Crowds Bus Stops Gas Stations

மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, Napoli, Italy

14 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை, சுதுமலை, Manippay, Drammen, Norway

16 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலை தீவு ஐயனார் கோவிலடி, கனடா, Canada

18 Apr, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

08 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, அளவெட்டி

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், London, United Kingdom

18 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

19 Apr, 2023
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Wimbledon, United Kingdom

08 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், சரவணை, Paris, France

20 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

வயாவிளான், Lyss, Switzerland

16 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, இராமநாதபுரம்

19 Mar, 2024
நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbrücken, Germany, London, United Kingdom

01 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம்

18 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்குவேலி, கொட்டாஞ்சேனை

20 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், ஜேர்மனி, Germany

19 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, மட்டக்களப்பு

15 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பெல்ஜியம், Belgium, Gloucester, United Kingdom

20 Apr, 2021
மரண அறிவித்தல்

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Witten, Germany

05 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, சித்தன்கேணி, சுவிஸ், Switzerland

19 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Village-Neuf, France

14 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US