திங்கட்கிழமையின் பின்னரான நாட்டின் முடக்கநிலை குறித்து இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தகவல்
எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் நாட்டை மீண்டும் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாடோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நோய் பரவுவதை கட்டுப்படுத்த நான்கு வார முடக்கல் போதுமானது. அத்துடன் இந்த காலகட்டத்தில் கோவிட் இறப்புக்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் குறைந்துள்ளன.
அடுத்த திங்கட்கிழமைக்குப் பின்னர் நாடு முடக்கப்படும் என நான் நினைக்கவில்லை. நாடு படிப்படியாக மீண்டும் திறக்கப்பட வேண்டும்.
கோவிட்டுடன் ஒரு புதிய வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும். அதே நேரத்தில் சுகாதார நடைமுறைகள் மற்றும் தடுப்பூசி திட்டம் தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam