சீனாவில் 10 நகரங்களில் ஊரடங்குச் சட்டம்
சீனாவில், உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், அந்த நாட்டில் 10 நகரங்களில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
உலக ஏனைய நாடுகளில், கொரோனாவின் உருமாறிய ஒமிக்ரோன் வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில், சீனாவில் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, நேற்று முன்தினம், 3 ஆயிரத்து 400 பேர் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த, சீன அரசாங்க் 10 நகரங்களில் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்துள்ளது. ஷென்சென் நகரில், 'அப்பிள்' செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை, போக்ஸ்கான் நிறுவனம் மூடியுள்ளது.
வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சீனாவின் மிகப் பெரிய நகரமான ஷாங்காயில், சில குடியிருப்பு பகுதிகள் மற்றும் அலுவலகப் பகுதிகளில் மாத்திரம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜிலிங் மாகாணத்தில், நேற்று இரண்டாவது நாளாக, ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளான ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜிலிங் தொழிற்சாலைகள் அதிகளவில் இயங்கும் ஷங்சுன் உட்பட ஐந்து நகரங்களில், மார்ச் ஆரம்பத்தில் இருந்தே ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளது.
கொரோனா பரவல் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சீனா அறிவித்திருந்த நிலையில், தற்போது அங்கு மாறான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சீனாவின் மூன்று மாகாணங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறினர் என்ற குற்றச்சாட்டில் 26 சுகாதார துறை அதிகாரிகளை சீன அரசாங்கம் பதவிகளில் இருந்து நீக்கியுள்ளது.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan