றம்புக்கணையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு நீக்கம்
றம்புக்கண பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. றம்புக்கண பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 19ம் திகதி மாலை முதல் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இவ்வாறு நடைமுறைப்படுத்தபட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை ஏற்றத்தினை கண்டித்து ரம்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்திருந்தனர்.