செட்டிகுளத்தில் சிறப்பாக இடம்பெற்ற கலை கலாசார பாரம்பரிய நிகழ்வு (Photos)
செட்டிகுளத்தில் கலை கலாசார பாரம்பரிய பண்பாட்டு ஊர்வலமும், தெய்வீக கிராம நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பெரியகட்டு, கணேசபுரம், புதுக்குடியேற்ற திட்டப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இன்று (30) குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதமரும், புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்ஷவின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ.ராமச்சந்திரகுருக்கள் பாபு சர்மா அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது கலை கலாசார பாரம்பரிய பண்பாட்டு ஊர்வலம் நந்திக் கொடிகளுடன் கணேசபுரம் சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் வரை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து கோமாதா பூஜை, மரநடுகை, அறநெறிப் பாடசாலை மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகள் என கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் பலவும் இடம்பெற்றன. அத்துடன், சைவ சமயத்தின் சிறப்புக்களையும், அதன் மேன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் குறித்த நிகழ்வுகள் அமைந்திருந்தன.










CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
