முதலீட்டு வலயத்துக்குள் மாத்திரம் கஞ்சா பயிரிட முன்னோடித் திட்டம் ஆரம்பம்
முதலீட்டு வலயத்துக்குள் மாத்திரம் கஞ்சா பயிரிடுவதற்கான முன்னோடித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நிபுணர் குழுவொன்றின் அனுமதியை இலங்கை முதலீட்டுச் சபை பெற்றுள்ளது.
முதலீட்டுச் சபை தலைமையகத்தில் நேற்றையதினம் (26.05.2023)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னோடித் திட்டம் கட்டுநாயக்க வலயத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் முன்னோடி திட்டத்தை இறுதி செய்வதற்காக முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் வருமான செயற்றிட்டம்
குறித்த திட்டத்தில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் கஞ்சாவை வளர்த்து அதிலிருந்து ஒரு பொருளைத் தயாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது அது நாட்டுக்கு வருமானமாக இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |