வடமராட்சி கிழக்கில் உத்தரவை மீறி மீண்டும் பாதியில் சேவையை நிறுத்தும் அரச பேருந்துகள்
வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் அரச பேருந்துகள் கட்டைக்காட்டுடன் சேவையை நிறுத்துவதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் கோவில் வரை செல்லாமல் கட்டைக்காடுடன் சேவையை நிறுத்துவதால் கேவில், நித்தியவெட்டை மற்றும் வைத்தியசாலைக்கு செல்லும் மக்கள் உட்பட பாடசாலை மாணவர்களும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
இதனடிப்படையில், வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவராக கடந்த வருடம் சேவையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் கோவில் வரை செல்லவேண்டுமென அறிவுறுத்தினார்.

இருப்பினும், ஒரு சில நாட்கள் பேருந்துகள் சேவையில் கேவில் வரை ஈடுபட்டு பின்பு இடைநிறுத்தி விட்டதாக கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ரஜீவனிடம் மக்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளை கோவில் வரை செல்லுமாறு பணிக்கப்பட்டது.
ஆனால், உத்தரவை கடைப்பிடிக்காமல் ஒரு சில பேருந்துகள் மீண்டும் கட்டைக்காட்டுடன் தமது சேவையை இடை நிறுத்திக் கொள்வதை அவதானிக்க முடிகின்றது.
பாண்டியன் குடும்பம் மீது பொய் புகார் அளித்த மயில் அம்மாவுக்கு நேர்ந்த கதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் போட்டோ Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri