சென்னையை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் 62 ஆவது லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது.
இந்தபோட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 187 ஓட்டங்கள் எடுத்தது.
ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 20 பந்தில் 43 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டெவால்ட் பிரேவிஸ் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷிவம் துபே ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பில் யுத்வீர் சிங் சரக், மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி
இதையடுத்து, 188 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களமிறங்கியது.
ஜெய்ஸ்வால் 19 பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி 33 பந்தில் 57 ஓட்டங்களுடனும், சஞ்சு சாம்சன் 41 ஓட்டங்களுடனும் வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய ஜுரெல் 12 பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுகளுக்கு 188 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இது ராஜஸ்தான் பெற்ற 4வது வெற்றி ஆகும், மற்றும் இது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இறுதி போட்டியுமாகும்.
You May Like This...

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
