தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றியை பதிவு செய்த சென்னை அணி
புதிய இணைப்பு
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த வருட ஐ.பி.எல் தொடரில் தனது 3ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
குறித்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதற்கமைய, கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்களை எடுத்தது.
பதிலுக்கு 138 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 17.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை எடுத்து வெற்றியை பதிவு செய்துள்ளது.
சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்றார்.
அதேவேளை, இந்த போட்டி முடிவடைந்த நிலையில், புள்ளிபட்டியலில் கொல்கத்தா அணி 2ஆவது இடத்திலும் சென்னை அணி 4ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 22ஆவது போட்டியில் சென்னை அணிக்கு வெற்றியிலக்காக 138 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.
மேலும், கொல்கத்தா அணி சார்பில் ஷ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 34 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
முதலாம் இணைப்பு
நடைபெற்றுவரும் 17ஆவது ஐபிஎல் (IPL) தொடரின் 22ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிகள் மோதிக் கொள்கின்றன.
குறித்த போட்டியானது, இன்றையதினம் (08.04.2024) சென்னை சேப்பாக்கம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்று வருகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
புள்ளிபட்டியல்
சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) இது தொடர்பாக தெரிவிக்கையில், சிறிது நேரத்தில் மைதானத்தின் ஈரப்பதன் அதிகரித்து பந்துவீசுவதில் கடினத்தன்மை அதிகரிக்கும் என்பதால் களத்தடுப்பை தேர்வு செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் 70 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
மேலும், புள்ளிபட்டியலில் கொல்கத்தா அணி 2ஆவது இடத்திலும் சென்னை அணி 4ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |