இஸ்ரேல் நாட்டில் மத நிகழ்வில் கடும் நெரிசல்! 45 பேர் பரிதாபமாக பலி
இஸ்ரேல் நாட்டின் மவுண்ட் மெரான் பகுதியில் இடம்பெற்ற மத நிகழ்வு ஒன்றின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சம்பவத்தில் 150 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 22 பேரின் சடலங்கள் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் 45 பேர் சிக்கி பலியானார்கள், 150 பேர் வரையில் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், 6 ஹெலிக்கொப்டர்கள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட அம்பியூலன்ஸ்கள் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன.
மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சபீத் பகுதியில் உள்ள ஜிவ் வைத்தியசாலை மற்றும் நஹாரியா பகுதியில் உள்ள கலிலீ மருத்துவ மையம் ஆகியவற்றில் சேர்த்தனர். இந்த சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களில் 20 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூட்ட நெரிசலுக்கான காரணம் பற்றி எதுவும் தெரியவரவில்லை. இதுபற்றி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் அமெரிக்க நாட்டவர்களும் இருப்பதாக சொல்லப்படுகின்றது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த சம்பவத்தை "மிகப்பெரிய பேரழிவு" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
You My Like This Video



Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan