நள்ளிரவையும் தாண்டி மண்ணெண்ணெய்க்காக கொழும்பில் அலைமோதும் மக்கள் கூட்டம்! ( Video)
நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் விலைவாசிகள் கடுமையாக உயர்த்தப்படுகின்றன. டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள், பால்மா, மருந்து பொருட்கள் என பல்வேறு பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருளுக்கும், எரிவாயு பெற்றுக்கொள்ளவும் மக்கள் நாடு முழுவதும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், கொழும்பில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள மக்கள் நள்ளிரவையும் தாண்டி எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் காத்திருக்கின்றனர்.
மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக பொது மக்கள் கூறியுள்ளனர். எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
